இரு கோவில்களில் கோபுர கலசங்கள் திருட்டு
ADDED :2887 days ago
அம்பத்துார் : இரு கோவில்களின் கோபுர கலசங்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சென்னை, அம்பத்துார், வெங்கடாபுரத்தில், ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில், மேனாம்பேட்டில், மகா சுவர்ண கணபதி கோவில் ஆகியவை உள்ளன. நேற்று காலை, கோவிலை திறக்க, அவற்றின் நிர்வாகிகள் வந்த போது, கோபுர கலசங்கள் திருடு போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய் என, கூறப்படுகிறது. அம்பத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.