லட்சுமிநரசிம்மர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :2884 days ago
பழநி:பழநி அருகே ராமநாதநகரில் உள்ள லட்சுமிநரசிம்மர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, லட்சுமிநரசிம்மருக்கு 108 சங்காபிஷேகம், யாகபூஜை, 16வகை அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இதேப்போல பரிவாரதெய்வங்களான விநாயகர், ஐயப்பசுவாமி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோயில் நிர்வாகி ராமநாதன் குடும்பத்தினர் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.