மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி வழிபாடு
                              ADDED :2821 days ago 
                            
                          
                           கொடுமுடி: புது மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கொடுமுடி, நுழைவு பாலம் அருகே, புது மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த, 30ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த, 6ல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அலகு குத்தும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பறவை, விமானம், உள்ளிட்ட அலகு குத்தி, ஊர்வலமாக கோவிலை நோக்கி வலம் வந்தனர். இன்று அன்னதானம் நடக்கிறது.