பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா துவக்கம்
ADDED :3105 days ago
பழநி: பழநி முருகன்கோயில் உபகோயிலான, மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, நேற்றிரவு முகூர்த்தக்கால் நடப்பட்டது.பிப்.13ல் திருக்கம்பம் சாட்டுதல், பிப்.,20ல், இரவு கொடியேற்றமும், பூவோடு வைத்தல் நடக்கிறது.
பிப்.,21ல் அடிவாரம், குமாரசமுத்திரம் அழகுநாச்சியம்மன் கோயில்களில் திருக்கல்யாணமும், பிப்.,23ல் மாரியம்மன்கோயிலில் சுமங்கலிபூஜையும், பிப்.,27 ல் திருக்கல்யாணமும் நடக்கிறது. பிப்.,28ல் தேரோட்டம் நடக்கிறது. பிப்.,20 முதல் மார்ச் 1 வரை மாரியம்மன் தங்கமயில், சப்பரம், தங்ககுதிரை, யானை, சிம்மவாகனங்களில் உலா வருதல் நடைபெறும். பிப்.,26முதல் 28 வரை பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா செய்கின்றனர்.