காஞ்சிபுரத்தில் கூரத்தாழ்வான் திரு அவதார உற்சவம்
ADDED :3115 days ago
காஞ்சிபுரம்:கூரத்தாழ்வான், 1,008வது திரு அவதார மஹோத்ஸவம், புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் நிறைவு பெற்றது.காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது.இங்கு, கூரத்தாழ்வானின், 1,008வது திருவவதார மஹோத்ஸவம், கடந்த மாதம், 27ல் துவங்கியது. தினமும், காலை, மாலையில் பல வாகனங்களில் கூரத்தாழ்வான் எழுந்தருளி, வீதியுலா வந்தார். ஒன்பதாம் நாள் உற்சவம், 4ம் தேதி, தேரோட்டம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, 13ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம், காலையில், திருமஞ்சனமும், இரவு, அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் கூரத்தாழ்வான் எழுந்தருளினார்.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.