உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் லட்சார்ச்சனை விழா

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் லட்சார்ச்சனை விழா

உடுமலை: உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், விசாலாட்சி அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது.உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், தை மாதத்தையொட்டி, விசாலாட்சி அம்மனுக்கு கடந்த 2ம்தேதி விளக்கு பூஜையுடன் லட்சார்ச்சனை விழா துவங்கியது. தை மாத கடைசி வெள்ளியான நேற்று லட்சார்ச்சனை நடந்தது. காலை, 6:00 மணிக்கு, ேஹாமத்துடன் பூஜை துவங்கியது. காலை, 7:30 மணிக்கு விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு லட்சார்ச்சனையும், மதியம், 12:30 மணிக்கு மகா தீபாராதனையும் இடம்பெற்றது. மாலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை, லட்சார்ச்சனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !