ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பச்சை பரப்புதல் வைபவம்!
ADDED :5037 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தை யொட்டி நேற்று பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் நேற்று பத்து உற்சவம் துவங்கியது. இதையொட்டி காலை, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், ஆண்டாள் , ரெங்கமன்னார் வேதபிரான் பட்டர் மாளிகையில், உலகம் சுபிட்சமாக இருப்பதை குறிக்கும் வகையில், பச்சை காய்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. அதை, ஆண்டாள்,ரெங்கமன்னார் பார்வையிட, திரட்டிப்பால், மணி பருப்பு நைவேத்யம் நடந்தது. பின், கோபால விலாசம் வந்தடைந்தனர். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஸ்தானிகம் ரமேஷ்,சுதர்சனன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.