சரபேஸ்வரர் சுவாமிக்கு லட்சார்ச்சனை
ADDED :2877 days ago
கோட்டூர் : அங்கலக்குறிச்சி கோபால்சுவாமி மலைக்கோவில் அடிவாரத்திலுள்ள, சரபேஸ்வரர் கோவிலில் நேற்று, சரபேஸ்வரர் லட்சார்ச்சனை பெருவிழா நடத்தப்பட்டது. விழாவின் துவக்க நிகழ்வாக மகா கணபதி ஹோமம், புண்ணியாகவாஜனம், கலச ஆவாஹனம், சரபேஸ்வரர் மூல மந்திர ஹோமம் திரவியகுதி பூர்ணாகுதி மற்றும் மஹா அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டது. காலை, 8:00 மணிக்கு மஹா சங்கல்பம், சரபேஸ்வரர் லட்சார்ச்சனை துவங்கியது. மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடத்தப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு விஷேச உபச்சார பூஜை மற்றும் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.