ஆளவந்தீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை சிறப்பு பூஜை
ADDED :2811 days ago
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோவிலில், வருடாந்திர லட்சார்ச்சனை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டத்தில், ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. நேற்று காலை சிவனுக்கு பால், தயிர், பழரசம், சந்தனம், மஞ்சள் முதலான திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ஆரணவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிவனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.