உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றவர்கள் மனம் இனிக்கட்டும்!

பெற்றவர்கள் மனம் இனிக்கட்டும்!

பெற்றவர்களை  ஏமாற்றி, பணம் பறித்து போதைக்கும், பெண்களுக்காகவும் செலவழித்து, வாழ்க்கையையே அழித்துக் கொள்ளும் இளைஞர்கள் அதிகமாகி விட்டனர். அவர்களெல்லாம் திருந்த வேண்டும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

*  ஒருவன் தன்  உறவினரையும், குறிப்பாக தன் வீட்டாரின் நலனில் அக்கறை இல்லாமல் போனால், அவன் தீயவனாக இருப்பான்.
*  தன் தகப்பனிடம்  கொள்ளையடித்து, தன் தாயை துரத்தி விடுகிறவன் வெட்கம், அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
*  தகப்பனையும், தாயையும் வெறுப்பவனின் செல்வம் அழிந்து போகும்.
*  உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், தகப்பனையும்,  தாயையும்  பெருமைபடுத்து. இதை மனதில் கொண்டு, பெற்றவர்கள் மனம் இனிக்க வாழ்ந்து, உங்கள் வாழ்வையும் இனிமையாக்கி கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !