சிவாலயம் வழிபடும் முறை
ADDED :2843 days ago
முதலில் விநாயகரை வணங்கி, பின் நந்தீஸ்வரரை வழிபட்டு கருவறைக்கு செல்ல வேண்டும். அங்கு சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்களை வழிபட்டு கோயிலை சுற்றி வர வேண்டும். பின் பைரவர் சன்னதியில் வழிபாட்டை முடித்து, கொடிமரத்தின் முன் தரையில் விழுந்து வணங்க வேண்டும். பின் சிறிது நேரம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.