தோஷம் இல்லாத ‘இலை’
ADDED :2843 days ago
வில்வம் லட்சுமி வாசம் செய்யும் இடம். வில்வ இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். இதற்கு ‘நிர்மால்ய தோஷம்’ கிடையாது. அதாவது, ஒருமுறை பயன்ப டுத்திய வில்வத்தை நீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை ‘வில்வ தளம்’ என்பர். இதனைக் கொண்டு சிவனை பூஜிப்பது சிறப்பு. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிக்க கூடாது.