உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கு பிடித்த ‘ஆலம்’

சிவனுக்கு பிடித்த ‘ஆலம்’

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் வலியைப் பொறுத்து கொள்ள முடியாமல் விஷம் கக்கியது. அப்போது கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இரு விஷங்களும் ஒன்று சேர்ந்தன. அதை சிவன் சாப்பிட்டு தேவர்களைக் காத்தார். ‘ஆலம்’ என்பதற்கு விஷம் என பொருள். இருவிஷங்கள் இணைந்தால் அதனை ‘ஆலாலம்’ என்று குறிப்பிட்டனர். இதுவே பேச்சு வழக்கில் ‘ஆலகாலம்’ என்று திரிந்துவிட்டது.  இந்த விஷத்தை அருந்தி தேவர்களை காத்ததால் ‘ஆலால சுந்தரா! அற்புத சுந்தரா!’ என்று சிவனை போற்றுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !