உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா சிவராத்திரி விழா: சேலம் சிவாலயங்களில் சிறப்பு பூஜை

மஹா சிவராத்திரி விழா: சேலம் சிவாலயங்களில் சிறப்பு பூஜை

சேலம்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலயங்களில், இன்று, சிறப்பு பூஜை நடக்கிறது. சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், இன்று மாலை, 5:00 மணிக்கு, சிவராத்திரி விழா துவங்குகிறது. தொடர்ந்து, நான்கு கால பூஜை நடக்கவுள்ளது. ஒவ்வொரு பூஜையின்போது, பால், தயிர், இளநீர் மூலம் சிறப்பு அபி?ஷகம் செய்து, சுகவனேஸ்வரருக்கு விசேஷ அலங்காரம் சாத்துபடி செய்யப்படும். அதேபோல், இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், குகை அம்பலவாணர், செவ்வாய்ப்பேட்டை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், மீனாட்சி சொக்கநாதர், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் என, மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில், சிறப்பு பூஜை நடக்கிறது. மஹாசிவராத்திரியை முன்னிட்டு கொளத்துார் அடுத்த பாலவாடி சித்தேஸ்வரன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக நவக்கிரக லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும், உணவு அருந்தாமல் விழித்திருந்து, சிவனை வழிபடுவதன் மூலம், அவரது முழுமையான அருளை பெற முடியும் என, பக்தர்கள் நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !