கரப்பாடியில் இன்று மகா சிவராத்திரி விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று இரவு மகா சிவராத்திரி விழா, கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. பொள்ளாச்சி அடுத்துள்ள கரப்பாடி கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட கற்கோவில்களில் முக்கியமானது. கோவிலில் இன்று இரவு, மகாசிவராத்திரி விழா நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு மங்கள இசையை தொடர்ந்து, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடக்கிறது. தொடர்ந்து இரவு, 9:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு,10:00 மணிக்கு முதல் கால அபிேஷகமும், நள்ளிரவு, 12:00 மணிக்கு சிவராத்திரி இரண்டாம் கால அபிேஷகம், இரண்டு மணிக்கு மூன்றாம் காலம், அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால அபிேஷகமும் நடக்கிறது. இதற்கிடையே, இரவு, 11:30 மணிக்கு கரப்பாடி இளைஞர்களின் தேவராட்டமும், ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. அதிகாலை, 5:00 மணிக்கு தீபாராதனை மற்றும் சுப்ரபாத பிரசாதமும் வழங்கப்படுகிறது.