திருப்போரூரில் பிரம்மோற்சவம் வரும் 20ல் கொடியேற்றம்
ADDED :2800 days ago
திருப்போரூர் : திருப்போரூர், கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா, 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவ விழா, 20ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள்,கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிலிருந்து, தினமும், காலை, இரவு வேளைகளில், சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளும் உற்சவர் கந்தசுவாமி பெருமான், மாடவீதிகளில் வீதியுலா வருவார். தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் உற்சவத்தில், முக்கிய நிகழ்வான தேரோட்டம், 26ம் தேதியும், அதை தொடர்ந்து தெப்போற்சவம், மார்ச் 1ம் தேதியும் நடைபெறும். திருக்கல்யாண உற்சவம், 4ம் தேதி நடக்கிறது. அத்துடன்,பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும். விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், 10 நாட்களும், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.