செம்பொற்ஜோதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2851 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. லாலாப்பேட்டை, கரூர் - திருச்சி பழைய சாலையில், செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று மாலை, 5:30 மணியளவில் பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக நந்தி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.