ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் திருபாஅடை உற்சவம்
ADDED :2850 days ago
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதுாரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் திருபாஅடை உற்சவம் நடந்தது. மார்கழி, தை மாதங்களில் பெருமாளுக்கு தயிர், பொங்கல் நைவேத்தியமாக படையல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.இந்த உற்சவங்கள் முடிந்தபின், பெருமாளுக்கு பிடித்த புளியோதரை, பால், அடை, முறுக்கு, சீடை, பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைத்து, வழிபடுவதே திருபாஅடை உற்சவம் எனப்படுகிறது. பெருமாள் அருள்புரியும், 108 திவ்ய தேசங்களிலும் இந்த உற்சவம் நடத்துவது வழக்கம். பெரியநாயக்கன்பாளையம், பழையூர் ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் நடந்த இந்த உற்சவத்தையொட்டி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உணவு பதார்த்தங்கள் பெருமாளுக்கு படைக்கப்பட்டு, பூஜை நடந்தது.