உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையத்தில் மஹா சிவராத்திரி: பக்தர்கள் வழிபாடு

குமாரபாளையத்தில் மஹா சிவராத்திரி: பக்தர்கள் வழிபாடு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மஹா சிவராத்திரி வழிபாடுகள், சிவாலயங்களில் கோலாகலமாக நடந்தது. குமாரபாளையம், காசி விஸ்வேஸ்வர், கைலாசநாதர், நடராஜா நகர் ஈஸ்வரன், அங்காளம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. கோவில்களில் நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. பக்தர்களின் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !