பெரியாண்டவர் அங்காளம்மன் கோவில் முப்பூஜை திருவிழா
ADDED :2798 days ago
நாமக்கல்: நாமக்கல், பெரியாண்டவர் அங்காளம்மன் கோவிலில், முப்பூஜை திருவிழா நடந்தது. நாமக்கல், உழவர் சந்தை அருகே கோட்டை முனியப்பன் கோவில், பெரியாண்டிச்சி, பெரியாண்டவர் அங்காளம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு, முப்பூஜை திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த, 11 காலை, காவிரியாற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வருதல் நடந்தது. 12ல், கரகம் பாலித்து, சக்தி அழைத்தல், இரவு, 12:00 மணிக்கு அம்மனுக்கு கண்திறக்கும் பூஜை, நேற்று காலை, சேந்தமங்கலம் சாலையில் இருந்து, மயான கொள்ளை சக்தி அழைத்தல், இரவு, 12:00 மணிக்கு முப்பூஜை நடந்தது. இன்று காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.