உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்

காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்

அன்னதானப்பட்டி: மாசித் திருவிழா, காளியம்மன் கோவிலில், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மாசித் திருவிழாவை முன்னிட்டு, சேலம், நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவிலில், நேற்றிரவு, 8:00 மணிக்கு, குமரக்கவுண்டர் தெரு விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி அழைத்து வரப்பட்டு பூச்சாட்டுதல் நடந்தது. பிப்., 18ல், அபி?ஷகம், மஹா தீபாராதனை, திருவிளக்கு பூஜை; 20 காலை, சித்தி விநாயகர் கோவிலிலிருந்து பால்குட ஊர்வலம், அபி?ஷக ஆராதனை நடக்கிறது. 21ல், சக்தி அழைத்தல், பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதலுடன், புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா; 22 இரவு சத்தாபரணம், 23 மஞ்சள் நீராட்டு விழா, பிப்., 24ல் மறுபூஜை நடக்கிறது.

* மாசி திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டி, அங்காளம்மன் கோவிலில், நேற்று காலை, கணபதி, மகாலட்சுமி, நந்தி மற்றும் அங்காளம்மன் நட்சத்திர யாகங்கள் நடந்தது. தொடர்ந்து, அம்மன் படம் வரைந்த கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜையுடன், திருவிழா துவங்கியது. இன்று காலை, தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், 63 நாயன்மார்கள் வரலாறு, சிவராத்திரி மகிமை சொற்பொழிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !