விஷ்ணுபதி புண்யகால பூஜை கோலாகலம்
ADDED :2850 days ago
வீராணம்: பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்யகால பூஜை கோலாகலமாக நடந்தது. விஷ்ணுபதி கமிட்டி சார்பில், சேலம், வீராணம், மாயவன் வேங்கடேச பெருமாள் கோவிலில், மாசி பிறப்பான நேற்று, விஷ்ணுபதி புண்யகால பூஜை நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு, பிரம்ம முகூர்த்தத்தில், கணபதி, லட்சுமிக்கு சிறப்பு பூஜை செய்து, யாகத்தில் வைத்த கலசங்களிலிருந்த புனிதநீரை, மூலவர் பெருமாள், உற்சவர் தசாவதார பெருமாளுக்கு, திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தசாவதார பெருமாளை, சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். இதில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, யாகத்தில் வைத்து பூஜித்த பேனா, பென்சில்கள் வழங்கப்பட்டன.