திருப்பரங்குன்றம் கோயில் கடைகளில் தீயணைப்பு கருவிகள்
ADDED :2803 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் 27 கடைகள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இருந்த கடைகளில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் உள்ள அனைத்து கடைகளிலும் தீயணைப்பு முதலுதவி கருவிகளை கடைக்காரர்கள் அமைத்துள்ளனர்.