செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோவில்களில் மாசி திருவிழா துவக்கம்
ADDED :2805 days ago
பவானி: பவானியில் உள்ள செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோவில்களில் நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டு விழா நடந்தது. பவானி நகர மக்களின் காவல் தெய்வமான செல்லியாண்டியம்மன், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன், மேற்கு தெரு மாரியம்மன், மற்றும் எல்லையம்மன் வகையறா கோவில்களில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் பூச்சாட்டு விழா நடந்து, மாசி திருவிழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை வழிபட்டு சென்றனர்.