உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருந்துறை சுற்றுப்பகுதிகளில் சிவராத்திரி விழா கோலாகலம்

பெருந்துறை சுற்றுப்பகுதிகளில் சிவராத்திரி விழா கோலாகலம்

பெருந்துறை: பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப்பகுதி கோவில்களில், சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சோழீஸ்வரர் கோவிலில், இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, அன்னதானம் வழங்கப்பட்டது. திங்களூர், அப்பிச்சிமார்மடம், மசிரியாத்தாள் கோவிலில், சிவராத்தி விழாவை முன்னிட்டு, நூற்றுக்கணக்கானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், ஆடு, மாடு, கன்றுக்குட்டிகள் உள்ளிட்ட கால்நடைகளை கோவிலுக்கு காணிக்கையாக அளித்தனர். விடிய விடிய நடந்த கும்மியடித்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !