வீரபத்திர சுவாமி கோவிலில் தீ மிதிவிழா
ADDED :2809 days ago
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வீரபத்திர சுவாமி கோவிலில், தீ மிதிவிழா நடந்தது. நாமகிரிப்பேட்டையில், தென்னிந்திய வீரஜங்கம சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. சிவராத்திரியில், சிறப்பு பூஜை, தீ மிதிவிழா நடப்பது வழக்கம். புனரமைப்பு பணிகள் நடந்து வந்ததால், 22 ஆண்டுகளாக விழா நடக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன், கோவில் கும்பாபி?ஷகம் நடந்தது. கோவில் நிர்வாகிகள், சிவராத்திரியில் தீ மிதிவிழா நடத்த ஏற்பாடுகள் செய்தனர். நேற்று முன்தினம் இரவு, சிறப்பு பூஜை, அபி?ஷக ஆராதனை, நேற்று காலை, 8:00 மணிக்கு, தீ மிதிவிழா நடந்தது. முதலில் பூசாரி, பின் பக்தர்கள் வீரபத்திரசுவாமி வேட மணிந்து தீ மிதித்தனர்.