உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேர் சிற்பங்கள் வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேர் சிற்பங்கள் வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஆண்டாள் தேரில் சிற்பமாக இருக்கும் தெய்வங்களுக்கு ஏழுர் மக்கள் குலதெய்வ வழிபாடு செய்து வருகின்றனர்.மகாசிவராத்திரியன்று குலதெய்வ வழிபாடு இந்துக்களின் வழிபாடாக உள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தேரின் கீழ்பக்கம் சிற்பங்களாக இருக்கும் காளியம்மன், சங்கிலியாண்டி, பூதத்தான் தெய்வங்களுக்கு ராஜபாளையம், சத்திரபட்டி, புனல்வேலி, ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புகோட்டை, ஆண்டிபட்டி, சக்கம்பட்டி ஆகிய ஏழு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் சிற்பங்களுக்கு அலங்காரம் செய்து பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !