ஆதி சுயம்பீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழா
ADDED :2805 days ago
சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி ஆதி சுயம்பீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழா நடந்தது. ஆயுள், ஆரோக்கியம், உலக அமைதி வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. கோ பூஜை மற்றும் நான்கு கால சிறப்பு பூஜை நடந்தது. விழா நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவ தொண்டர்கள், சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவாரச்சாரியார் உதயக்குமார், வீராச்சாமி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.