ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை
ADDED :2806 days ago
மதுரை:மதுரை ஜெய்ஹிந்த்புரம் தாம்ப்ராஸ் கிளை சார்பில் சத்யசாய்நகர் ஆனந்த நிலையத்தில் ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை நடந்தது. கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில நிர்வாகிகள் இல.அமுதன், எஸ்.பக்தவத்சலம், ஆனந்த நிலைய நிர்வாகி ஸ்ரீனிவாசன், கிளை நிர்வாகிகள் பிச்சுமணி, ஆர்.பக்தவத்சலம், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். மகளிர் அணியினர் ஏற்பாடுகளை செய்தனர். பூஜையை கிளை நிர்வாகி ராமகிருஷ்ணன் நடத்தினார்.