செவ்வாயாக செவ்வேள்!
ADDED :2837 days ago
ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து தெற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இது மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கந்த சஷ்டிகவசம் தேவராய சுவாமிகளால் இத்தலத்தில்தான் அரங்கேற்றப்பட்டது. அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது திருப்புகழ்பாடி முருகனிடம் படிக்காசு பெற்ற தலம். முருகப்பெருமான் செவ்வாய் கிரகத்துக்குரிய அதிதேவதை என்பதால் கருவறையில் நடுநாயகமாக முருகன் செவ்வாய் கிரக அம்சத்தில் அமைந்து அருள்பாலிக்கிறார். மூலவரைச் சுற்றியுள்ள கோஷ்டங்களில் சூரியன், சந்திரன், புதன், வியாழன், சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய எட்டுக் கிரகங்களும் இடம் பெற்றுள்ளன. செவ்வேள், செவ்வாயாகக் காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே அமைந்துள்ளது!