கடுகான மிளகு
ADDED :2837 days ago
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் மணக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் கீழிருப்பு, இங்கு சிவகாமி சமேதராய் அருள்கிறார் சிதம்பரேஸ்வரர். ஒரு மிளகு வியாபாரி கொண்டு வந்த மிளகு மூட்டையை அவன் சொன்ன பொய்ப்படி கடுகு மூட்டையாக்கி அவனுக்கு நேர்மையின் அவசியத்தை உணர்த்தி, மீண்டும் கடுகினை மிளகாக்கி திருவிளையாடல் புரிந்தவர் இத்தல ஈசன். இத்தலத்தில் மிளகு சித்தர் என்ற அருளாளர் கடவுளுடன் கலந்ததாக ஒரு தகவல் உண்டு. இத்தல ஈசனை வழிபட்டால் வியாபாரம், தொழில் அபிவிருத்தி அடையும் என்பர்.