கேட்ட வரம் தரும் மங்கள சண்டி
ADDED :2837 days ago
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள துர்க்கை மிகவும் ஆற்றல் வாய்ந்தவள். ராஜேந்திர சோழனின் குலதெய்வமான இவள், சிறுமியின் வடிவில், சிரித்த முகத்துடன் இருபது கரம் கொண்டு மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் அபூர்வ தரிசனம் தருகிறாள். இவளை மங்கள சண்டி என்கிறார்கள். திருமண பாக்கியம், குழந்தை வரம், பதவி உயர்வு என கேட்ட வரம் அருள்புரியும் அன்னை இவள் என்பது நம்பிக்கை.