ராமர் சொன்ன கீதை
ADDED :2824 days ago
தம்பி கும்பகர்ணன், மகன் மேகநாதன் ஆகியோரை இழந்த ராவணன், யுத்த ரதம் என்னும் தேரில் ராமனோடு போர் புரிய புறப்பட்டான். இதை அறிந்த ராவணனின் தம்பி விபீஷணனுக்கு பயம் வந்தது. எல்லா ஆயுதத்தையும் எடுத்துச் செல்லும் ராவணன் முன், ஒரு வில்லுடன் இருக்கும் ராமர் வெற்றி பெறுவாரா?” என பயந்தார். தன் மீது கொண்ட அன்பினால் விபீஷணன் பயப்படுவதை ராமர் உணர்ந்தார். தர்மமே வெல்லும் என்னும் உண்மையை எடுத்துரைத்தார். அதுவே விபீஷண கீதை.