உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்மாத முதல் ஞாயிறு சிறப்பு பூஜை

வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்மாத முதல் ஞாயிறு சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டி கந்தசாமி கோவிலின் பின்புறத்தில் உள்ள சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, வீரபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேற்று மாசி முதல் ஞாயிறு தினத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள், தீபாராதனைகள் நடந்தன. வெள்ளி கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். மேலும், 16 வகையான அபி ?ஷக பூஜைகள் நடந்தன. காளிப் பட்டி, ஆட்டையாம்பட்டி, மல்ல சமுத்திரம், மங்களம், வேலநத்தம், காரகுட்டிபாளையம், சந்திரம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, வீரபக்த ஆஞ்சநேயர் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !