உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலில் இன்று பிரம்மோற்சவம்

திருத்தணி கோவிலில் இன்று பிரம்மோற்சவம்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, இன்று துவக்கி, மார்ச் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. பன்னிரண்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை 9:30 மணிக்கும், இரவு 7:00 மணிக்கும் என, இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா, இன்று இரவு, விநாயகர் வீதியுலாவுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. நாளை, காலை, 5:30- - 6:00 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.இம்மாதம், 27ம் தேதி, அதிகாலையில் வள்ளி திருக்கல்யாணம் உற்சவம், மார்ச் 1ம் தேதி கொடி இறக்கம், 2ம் தேதி சப்தாபரணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:


தேதி    நேரம்    வாகனம்

பிப். 19    இரவு    விநாயகர் வீதியுலா
பிப். 20    காலை    கொடியேற்றம் இரவு    கேடய உலா
பிப். 21    காலை    வெள்ளி சூர்யபிரபை இரவு    பூத வாகனம்
பிப். 22    காலை    சிம்ம வாகனம் இரவு    ஆட்டுக்கிடாய் வாகனம்
பிப். 23    காலை    பல்லக்கு சேவை இரவு    வெள்ளி நாக வாகனம்
பிப். 24    காலை    அன்ன வாகனம் இரவு    வெள்ளிமயில் வாகனம்
பிப். 25    மாலை    புலி வாகனம் இரவு    யானை வாகனம்
பிப். 26    இரவு    தங்கத்தேர்
பிப். 27    காலை    யாளி வாகனம் மாலை    பாரிவேட்டை அதிகாலை    1:00 வள்ளி திருக்கல்யாணம்
பிப். 28    காலை    கேடய உலா மாலை 5:00    கதம்பப்பொடி விழா இரவு    ஆறுமுக சுவாமி உற்சவம்
மார்ச் 1 காலை தீர்த்தவாரி சண்முக சுவாமி உற்சவம் மாலை 5:00    உற்சவர் அபிஷேகம் இரவு    கொடி இறக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !