விநாயகருக்கு நந்தி வாகனம்
ADDED :2834 days ago
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ளது முக்கூட்டு மலை. மூன்று மலைகள் இணையும் இவ்விடத்தின் அடிவாரத்தில் கன்னிவிநாயகர் கோயில் கொண்டுள்ளார். இவர் கன்னிப்பெண்களை பாதுகாப்பவராக அருள்புரிகிறார்.பூலோகத்திற்கு பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்த (ஏழு) கன்னியர்களுடன் வந்த சிவன் இங்கு அமர்ந்து ஓய்வெடுத்தார். இவ்விடத்தின் அழகில் மயங்கிய சப்த கன்னிகள், தாங்கள் அங்கேயே தங்கிக்கொள்வதாக சிவனிடம் வேண்டினர். ஒப்புக்கொண்ட சிவன் அவர்களுக்கு பாதுகாவலராக விநாயகரை நியமித்து, நந்தியையும் பாதுகாப்பாக விட்டுச்சென்றார். இதனால் இங்குள்ள விநாயகர் மூஞ்சூறு வாகனம் இன்றி, நந்தி வாகனத்துடன் காட்சி தருவது சிறப்பு. விநாயகர் சன்னதி அருகிலுள்ள ஏழு கோடுகளும், சப்தகன்னியராக கருதப்படுகின்றன.