உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவத்தொழில் வேண்டாமே!

பாவத்தொழில் வேண்டாமே!

ஒரு ஊரில், போதைமருந்தை புகையிலைக்குள் பொதிந்து விற்பவன் இருந்தான். ஒருமுறை படகில் போதை மருந்தை கடத்தி வந்தான்.  நடுக்கடலில் காவலர்கள் சுற்றி வளைத்தனர்.  அவர்களிடமிருந்து தப்ப, பாய்மரத்தை விரித்து, அதன் மறைவில் இருந்து கொண்டு, போதை பொட்டலங்களை கடலில் வீசினான். படகில் ஒன்றுமில்லையென சொல்லி தப்பி விடலாம் என்பது திட்டம்.எல்லாவற்றையும் வீசிய பின், பாய் மரத்தை சுருட்டினான். அதிகாரிகள் அவனை கைது செய்தனர். படகில் ஒன்றுமில்லையே! ஏன் கைது செய்கிறீர்கள்?” என்றான். ஒரு அதிகாரி, “படகில் ஒன்றுமில்லை என்பது உண்மை. பின்னால் திரும்பிப்பார். நீ வீசிய போதை மருந்து பெட்டிகள் மிதப்பதை!” என்றார். பாவிகளை தீவினை தொடரும்” என்கிறது பைபிள். பாவத்தொழில் புரிவோர் என்றாவது சிக்குவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !