கும்பாபிஷேகம் முடித்து 48 நாள் மண்டலபூஜை நடத்துவது ஏன்?
ADDED :2833 days ago
கும்பாபிஷேகத்தின் போது சுவாமி சிலையிலிருந்து சக்தியை, குடத்திற்கு இறக்கி யாகபூஜை நடத்துவர். அதன் பின் மீண்டும் குடத்தில் இருக்கும் சக்தியை, கும்பாபிஷேகத்தின் மூலம் சிலையில் சேர்ப்பர். இந்த சக்தி, சிலையில் நீண்ட காலம் நிலைக்க மண்டல பூஜையை நடத்துகிறோம்.