உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம்!

மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம்!

தேனி:தேனி அருகே சர்ச் ஒன்றில் காட்டில் மூங்கில் வேட்டையாடி, புத்தாண்டு பிரார்த்தனை நடத்தும் பழக்கம் உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மணியக்காரன்பட்டியில் உள்ளது சி.எஸ்.ஐ., சர்ச். இங்கு ஒவ்வொரு புத்தாண்டிலும் கொடியேற்றம் நடத்தி, சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். இதற்காக, காட்டில் மூங்கில் வேட்டை நடத்தி, மரம் கொண்டு வரப்படும். இந்த ஆண்டிற்கான மூங்கில் வேட்டை, டிச., 24ல் தொடங்கியது. வனத்துறையினர் ஒப்புதலோடு குமுளி இரைச்சல் பாலம் பகுதியில் நடந்த வேட்டை, மூன்று நாட்கள் தொடர்ந்தது. நேற்று முன்தினம் கொடிமரத்திற்கு ஏற்ற 90 அடி உயரமுள்ள மூங்கிலை கண்டுபிடித்து வெட்டினர். கடந்த இரு நாட்களாக குமுளியிலிருந்து சுமந்தபடி, நடந்து வந்தவர்கள், நேற்று மதியம் தேனி வந்தனர். கிராம இளைஞரணி தலைவர் சாலமோன் கூறியதாவது: மூங்கில் வேட்டைக்காக குறிப்பிட்ட இளைஞர்களை தேர்வு செய்வோம்.தேவைக்குஉரிய மரம் கிடைக்க, பல நாட்கள் ஆகும். அதுவரை தேவையான உணவுகளை எடுத்துசெல்வர். இம்முறை மரம் கிடைக்க மூன்று நாட்கள் ஆனது. அங்கிருந்து தூக்கி வர வேண்டும் என்பது வழக்கம். கொண்டு வரும் மூங்கிலில் கொடியேற்றி, 300 அடி தூரத்திலிருந்து ஓடிவந்து நடுவோம். அதன்பின் பிரார்த்தனை நடக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !