உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலுக்கு பறவைக்காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள்

பழநி கோயிலுக்கு பறவைக்காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள்

பழநி: கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலுக்கு வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், பால்குடங்கள், அலகு குத்தி வெளியூர் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி மலைக்கோயில் நேற்று கார்த்திகையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. வின்ச், ரோப்கார் ஸ்டேஷன், அன்னதானக்கூடத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்தனர். வால்பாறையைச்சேர்ந்த பக்தர்கள் மாசி மக திருவிழாவை முன்னிட்டு, உடல் முழுவதும் அலகு குத்தியும், பறவைக்காவடி, பால்குடங்கள் எடுத்தும் கிரிவலம் வந்து மலைக்கோயிலில் தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், மயில், காவடிகள், பால் குடங்கள் எடுத்து வந்தனர். இரவு திரு விளக்குபூஜை மற்றும் தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !