அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் குண்டம் விழா
ADDED :3144 days ago
ஈரோடு: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். ஈரோடு, கீரக்கார வீதி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மஹா சிவராத்திரி உற்சவம், கடந்த, 13ல் தொடங்கியது. இதையடுத்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல், கரகம் வருதல், அக்னி கபாளம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. கோவில் பூசாரி முதலாவதாக இறங்கினார். அவரை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை அம்மனுக்கு மறு அபி?ஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கலைமகள் நற்பணி மன்றத்தினர் செய்தனர்.