உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கச்சத்தீவு ஆலய விழாவுக்கு 1,920 பேர் பயணம்

ராமேஸ்வரம் கச்சத்தீவு ஆலய விழாவுக்கு 1,920 பேர் பயணம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் (பிப். 24) நடக்கும் விழாவிற்காக ராமேஸ் வரத்தில் இருந்து 60 விசைப்படகுகளில் 1,920 பேர் (பிப். 23) புறப்பட்டனர். கலெக்டர் நடராஜன் வழியனுப்பினார். கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் போலீசார், வருவாய்துறை, சுங்கத்துறையினர் சோதனையிட்ட பின் அவர்களை அனுமதித்தனர். கச்சதீவில் (பிப். 23) கொடி ஏற்றப்பட்டு சிலுவை பாதை பூஜை, தேர் பவனி நடந்தது. இன்று (பிப்.,24) திருப்பலி முடிந்ததும், காலை 10:00 மணி முதல் அங்கிருந்து பக்தர்கள் புறப்பட்டு மதியம் ராமேஸ்வரம் வருவர். ராம நாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி, உறவினர்கள் ஐந்து பேருடன் கச்சதீவு விழா வுக்கு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !