பொள்ளாச்சி மாகாளியம்மன்கோவில் கோவில் திருவிழாவில் முளைப்பாலி ஊர்வலம்
ADDED :2824 days ago
பொள்ளாச்சி: நெகமம் அருகே, செட்டிக்காபாளையம் மாகாளியம்மன்கோவில் திருக்கல் யாண விழா முளைப்பாலி ஊர்வலத்துடன் நிறைவடைந்தது.
பொள்ளாச்சி, நெகமம் அடுத்துள்ள செட்டிக்காபாளையம் மாகாளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த, 20ம் தேதி பூவோடு எடுத்தல், அம்மன் அழைப்பு, வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசையை கொண்டு வருதலுடன் துவங்கியது.கடந்த, 21ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு திருக்கல் யாணம், 6:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தலும் விமரிசையாக நடந்தது. (பிப். 23) காலை சுவாமி திருவீதி உலா, மஞ்சள் நீராடல், அபிஷேக அலங்கார பூஜையும் நடந்தது.
மதியம், 3:00 மணிக்கு, கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாலி எடுத்துச் சென்று, ஊர் பொதுக்கிணறு அருகே முளைப்பாலி வைத்து, அம்மனை வழிபட்டனர். அன்னதானத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.