பொள்ளாச்சி நெகமம்மாகாளியம்மன் கோவிலில் மலர் அலங்கார வழிபாடு
ADDED :2824 days ago
பொள்ளாச்சி:நெகமம் மாகாளியம்மன் கோவில் திருவிழா (பிப்23), அபிஷேக பூஜையுடன் நிறைவடைந்தது.நெகமம், கடைவீதியிலுள்ள பழமையான மாகாளியம்மன் கோவில் திருப்பணி முடிந்து, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.இந்நிலையில், கோவில் திருவிழா துவங்கியது. சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களின் பூவோடு ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடந்தது. அபிஷேக பூஜையுடன் விழா நிறைவடைந்தது.