ஊத்துக்கோட்டை மாகரல்கண்டிகை திரவுபதி அம்மன் கோவிலில் வரும் 1ல் கும்பாபிஷேக விழா
ஊத்துக்கோட்டை : திரவுபதி அம்மன் கோவிலில், மார்ச், 1ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
எல்லாபுரம் ஒன்றியம், மாகரல்கண்டிகை கிராமத்தில் உள்ளது, துர்கா, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி, ப்ராம்ஹனி சமேத திரவுபதி அம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் சிதில மடைந்து காணப்பட்டதால், பொதுமக்கள் பங்களிப்புடன், கோவில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது.திருப்பணிகள் முடிந்த நிலையில், மார்ச் 1ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, 28ம் தேதி காலை, 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், ஆகிய நிகழ்ச் சிகள் நடக்கின்றன.
விழாவின் முக்கிய நாளான, 1ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை, 8:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, அம்மன் அருள்பாலிக்கிறார். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.