சேலம்: கோட்டை பெருமாள் கோவிலில், தீ தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கர்
சேலம்: கோட்டை பெருமாள் கோவிலில், தீ விபத்து குறித்து, பல்வேறு விழிப்புணர்வு வாசக ங்கள் அச்சடிக்கப்பட்ட, ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், தீ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில், பல்வேறு கோவில்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட, ஸ்டிக்கர்கள் , பக்தர்களின் பார்வைக்கு தெரியும்படி ஒட்டப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று, சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ஒட்டப்பட்டது. அதில், குப்பையை, தொட் டியில் போடவும்; விளக்குகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள, ஸ்டாண்டுகளில் வைக்கவும்; சன்னதி, கோவில் தூண்கள் மற்றும் கற்சிலைகளுக்கு அருகில், விளக்குகள் வைக்கக்கூடாது; எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை, கோவிலுக்குள் கொண்டு வரக் கூடா து; பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது ஆகியவை இடம் பெற் றுள்ளன. அவை, கோவில் நுழைவாயில், தூண்கள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டு வருகின் றன. விழிப்புணர்வு வாசகத்தில் உள்ளதை போன்று, பக்தர்கள் நடந்து கொள்கிறா ர்களா என, சிசிடிவி கேமரா மூலம், கோவில் ஊழியர்கள் கண்காணிக்கின்றனர். விதிமீறும் பக்தர்களுக்கு, அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கின்றனர்.