உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் விளக்கு பூஜை

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் விளக்கு பூஜை

திருச்செங்கோடு: சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி தீக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு, விளக்கு பூஜை நடந்தது. திருச்செங்கோடு, சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி தீக்குண்டம் திருவிழா, கடந்த, 16ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பக்தர்கள் மலையடிக் குட்டையில் இருந் து, தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்தனர். புனித நீரை கொண்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இரவு, அம்மன் அழைத்தல், சக்திகரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந் தது. (பிப்.23) விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அலகுகுத்தி, அக்னிசட்டி ஏந்தி, நான்குரத வீதிக ள் வழியாக பெண்கள் ஊர்வலம் வந்து, வேண்டுதலை நிறைவேற்றினர். நாளை, 108 சங்காபிஷே கம், 26ல் பூச்சொறிதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. 27 நள்ளிரவு குண்டம் இறங்குதல் நடக்கிறது. 28ல், பொங்கல் விழா, மார்ச், 3ல் அம்மன் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !