கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலிற்கு பாதுகாப்பற்ற தேர்
ADDED :2825 days ago
கம்பம்: கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலிற்கு சொந்தமான தேருக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கம்பம் நகரின் மையப்பகுதியில் மெயின்ரோட்டில் கம்பராயப் பெருமாள் கோயில் தேர் நிறுத் தப்பட்டுள்ளது.
இதற்கு முன் தேரைச் சுற்றி கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. தேரோட்டத்திற்கு பின் கடைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. தேரை சுற்றி பெயருக்கு வேலி அமைக்கப் பட்டுள்ளது.
அது அடிக்கடி சேதப்படுத்தப்படுகிறது. புகார் தந்தால் வழக்கு பதிவு செய்ய போலீசார் தாமதப்ப டுத்துகின்றனர் என கூறப்படுகிறது.
எனவே தேரை பாதுகாக்க கோயில் செயல் அலுவலர் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.