தேவிபட்டினம் நவபாஷணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
ADDED :2823 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தந்துள்ளார்.
தேவிபட்டினம் நவபாஷணத்திற்கு கடந்த சில வாரங்களாக விடுமுறை நாட்களிலும் குறைந்த அளவிலான பக்தர்களே வந்து சென்ற நிலையில், (பிப்.25) பக்தர்கள் வருகை நவபாஷணத்தில் அதிகரித்து காணப்பட்டது.
வட மாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் நவகிரகங்களை சுற்றி வந்து நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து தரிசனம் செய்தனர்.