விருதுநகர் மாவட்டத்தில் கல்வியில் முதலிடம் பிடிக்க கோயிலில் யாகம்
ADDED :2823 days ago
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு எழுதும் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டியும், மாவட்டம் கல்வியில் முதலிடம் பெற வேண்டியும் விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் சார்பில் விருதுநகர் வால சுப்பிரமணிய சுவாமி வளாகத்தில் அமைந்துள்ள பாலாஜி கோயிலில் உள்ள கல்விக் கடவுள் ஹயக்ரீவர்க்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்களும், பெற்றோர்களும், கலந்து கொண்டனர். இந்த யாகத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பூஜை செய்யப்பட்ட பேனா, பென்சில், கயிறு வழங்கப்பட்டது.